இயக்குனர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பு சமயங்களில் படங்களில் நடிக்கும் கலைஞர்களை அடிப்பதாக செய்தி வெளியானது. அதன் பிறகு மறைந்த நடிகர் தங்கராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து கொண்டிருந்த போது தன்னை படப்பிடிப்பில் வைத்து மாரிசெல்வராஜ் அடித்ததாக தெரிவித்து இருந்தார். அவர் பேசிய வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது.
இந்நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த டெலிபோன் ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் மாமன்னன் படப்பிடிப்பில் ஒருவரை கொடூரமாக அடித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டெலிபோன் ராஜ், “படப்பிடிப்பில் மற்றவர்களை அடிப்பது என்பது மிகவும் கேவலமான ஒரு செயல்.
வாழை மட்டையை வைத்து ஒருவரை மாரிசெல்வராஜ் கடுமையாக தாக்கினார். அதனை நானே என்னுடைய கண்களால் பார்த்தேன். பிறகு மாமன்னன் படப்பிடிப்பின் போது ஒருவருடைய தலை முடியை பிடித்துக்கொண்டு அப்டியே இழுத்தார். அப்படி முடியை பிடித்து இழுக்கும் போது அவருடைய முகத்தில் அந்த அளவிற்கு கோபம் தெரிந்தது. இப்படியெல்லாம் ஒருவரை அடிக்கலாமா..? இதெல்லாம் மிகப்பெரிய தவறு சினிமா தான இது?
ஜாலியாக சந்தோசமாக படங்களை செய்துகொண்டு போங்க. அதைவிட்டுவிட்டு எதற்காக இப்படியெல்லாம் ஒருவரை அடித்துக் கொடுமை செய்கிறீர்கள்..? மாரிசெல்வராஜ் போலவே இயக்குனர் பாலா சாரும் அப்படி தான். அவரும் படங்களில் பணியாற்றுபவர்களை அடிப்பார். இயக்குனர் பாலா அடித்ததற்கான வீடியோக்களை நான் என்னுடைய தொலைபேசியில் வைத்திருக்கிறேன். ஆண், பெண் என்றெல்லாம் பார்க்கமாட்டார். கையில் கம்பை வைத்துக்கொண்டு அனைவரையும் அடிப்பார். அடிக்கிறது கேவலமாக திட்டுவது பல பேர் மத்தியில் நான் தான் பெரிய இயக்குனர் என்பதையெல்லாம் காமிக்கவே கூடாது.
என்னுடைய சொந்த ஊரில் நான் படம் எடுக்கிறேன் என்றால் என்னுடைய ஊரில் நான் படப்பிடிப்பு நடத்துவேன். அப்படி நடத்தினால் நம்மளுடைய ஊரில் உள்ள அனைவரும் சரி நம்மளுடைய பையன் படம் எடுக்கிறான் என்று பெயர் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே சிலரை திட்டுவது பல பேரை அடிப்பது என நிறைய பேர் இருக்கிறார்கள். நான் மாரி செல்வராஜ் மட்டும் சொல்லவில்லை நிறைய பேர் அப்படி தான் இருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.