fbpx

’தான் இறந்துவிடுவதை முன்கூட்டியே சீரியலில் நடித்துக் காட்டிய மாரிமுத்து’..!! ’இப்போ நிஜமாவே நடந்துருச்சு’..!! பெரும் துயரம்..!!

சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (வயது 56) எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றவராக மாறினார். இவரின் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இவரது நடிப்பு எதிர்நீச்சல் சீரியலை பெரும் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

இவர், தேனி மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியுள்ளார். இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார். இந்நிலையில், இவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் எதிர்நீச்சல் சீரியலில் மாரடைப்பு குறித்தும் தமக்கு ஏதோ நடக்கப் போகிறது.. கெட்டதாக தெரிகிறது என மாரிமுத்து பேசிய வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வசனம்தான் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மாரிமுத்து சீரியலில் பேசியது. இப்போது நிஜத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு நம்மைவிட்டு இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணமடைந்திருப்பது பெருந்துயரத்துக்குரியது..!

https://twitter.com/Troll_Cinema/status/1700013303425286361?s=20

Chella

Next Post

இது போலி பத்திரமா..? இனி நீங்களே ஈசியா கண்டுபிடிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு கொண்டுவந்த புதிய வசதி..!!

Fri Sep 8 , 2023
நாளுக்கு நாள் போலி பத்திரங்களின் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பத்திரங்கள் யார் பெயரில் உள்ளது என்பதை ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும். நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் மிக முக்கியம். அதனால் தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் அரங்கேறி வருகிறது. ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை […]

You May Like