fbpx

மெரினா மரணம்..!! நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!! எவ்வளவு தெரியுமா..?

மெரினாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், ”சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக மிக அதிகளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தூங்கிக் கொண்டிருந்த நண்பன்..!! தலையில் ஒரே போடு..!! துடிதுடித்து பலி..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

English Summary

As 5 people died in Marina, Rs 5 lakh relief assistance has been announced for their families.

Chella

Next Post

ரத்தன் டாடா உடல்நிலையில் பின்னடைவு..?? அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Mon Oct 7 , 2024
News spread that popular businessman and former chairman of Tata Group Ratan Tata has been admitted to the hospital.

You May Like