fbpx

திருமண பலாத்காரம்..!! கணவனை மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெண்கள் இப்படியும் செய்வார்கள்..!!

திருமண பலாத்காரத்தை குற்றமாக்கினால் குடும்ப உறவில் ஆண்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு விடும். கணவனை மிரட்ட பெண்கள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மனைவியின் விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. தற்போது இருக்கும் சட்டங்களின்படி இதில் ஆண்களுக்கு சில விதி விலக்குகள் இருக்கின்றன. அவற்றை நீக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

திருமண பலாத்காரம்..!! கணவனை மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பெண்கள் இப்படியும் செய்வார்கள்..!!

இந்நிலையில், புருஸ் ஆயோ டிரஸ்ட் என்கிற அரசு சாரா அமைப்பின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், திருமண பலாத்காரத்தை குற்றமாக பார்ப்பது என்பது திருமணம் என்கிற கட்டமைப்பை சீர்குலைத்து விடும் அபாயம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இருக்கும் ஒரே சாட்சி அல்லது ஆதாரம் மனைவிதான். அப்படி இருக்கும்போது, குடும்ப வன்முறை தொடர்பான பொய் வழக்குகளால் பல ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், திருமண பலாத்காரத்தை குற்றமாக்கினால் குடும்ப உறவில் ஆண்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவனை மிரட்டவும் தன் கட்டுப்பாட்டில் கணவனை வைத்திருக்கவும் பெண்கள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது. திருமண பலாத்கார வழக்கில் இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

TVS நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Mon Jan 23 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Technical Service Executive பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க […]

You May Like