fbpx

ஓடிடி-யில் வெளியாகும் மார்க் ஆண்டனி..!! எப்போது தெரியுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். மார்க் ஆண்டனி படம், காமெடி-சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்துள்ளனர்.

மார்க் ஆண்டனி படத்தில் ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால், நீண்ட வருடங்களுக்கு பின்னர் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் ஹீரோக்களின் லிஸ்டில் இணைந்துள்ளார். உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் இம்மாதம் (அக்டோபர்) வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம். இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Chella

Next Post

இது என்னடா நித்திக்கு வந்த சோதனை..!! ரஞ்சிதாவால் வெடித்த புதிய பிரச்சனை..!! கடுப்பில் சிஷ்யைகள்..!!

Sun Oct 8 , 2023
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. இவர், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், […]

You May Like