இந்தியாவில் வாழ்ந்து வரும் பலவகையான பழங்குடியினர் தொன்றுதொட்டு அவர்களின் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வியல், அவர்களின் சம்பிரதாயங்கள், திருமண முறை, அன்றாட வாழ்க்கை முறை என அனைத்தும் முற்றிலும் நம்மில் இருந்து வேறுபட்டிருக்கும். அந்தவகையில், உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக கருதப்படும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் இன பழங்குடியின மக்கள், திருமணத்திற்கு ஒரு விசித்திரமான சடங்கை பின்பற்றி வருகின்றனர்.
ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினால், முதலில் அந்த மணமகன் மாமனாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமாம். அதாவது மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டும், பையன் உண்மையிலேயே கடின உழைப்பாளிதான் என்று தோன்றினால் மட்டுமே அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பார்களாம். அதே போல் “என் மகளுக்காக பையன் எதை வேண்டுமானாலும் செய்வான்” என்பதை நிரூபிக்க பன்றியின் பச்சை ரத்தத்தை அப்டியே குடிக்க சொல்வார்களாம். இந்த பலப்பரீட்சைகளில் மாமனாரின் மனம் கவர்ந்தால் மட்டுமே திருமணம் நடைபெறுமாம்.
இதேபோல், சட்டிஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா பழங்குடியின மக்கள் மத்தியில்தான் இன்னொரு பழக்கமும் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு திருமணமானகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி, அங்கு செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.
அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் கோட்டூலுக்கு செல்லலாம். இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல, மகாராஸ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள் அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது. குறிப்பாக கோண்ட் இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்திருப்பது முரியா இன மக்கள் தான்.
ஆனால், கோட்டூல் என்பது ஒன்றும் உள்ளே சென்று ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ளும் இடம் கிடையாது. அங்கு தேர்வு செய்யும் நபர்கள் ஜோடியாக மட்டுமே தங்க வேண்டும் அவர்கள் தனிமையில் இருப்பதை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அதே போல அந்த கோட்டூலுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது. அங்கு ஒரு லீடர் இருப்பார் அவர் தான் அந்த ஒட்டு மொத்த கோட்டூலுக்குமே பொறுப்பு, கோட்டூல் என்பது ஒரு செக்ஸ் பள்ளியாகவே இயங்கும் அங்கு உடலுறவு கொள்வது மட்டுமே வேலையில்லை. அங்கு சுத்தமாக இருப்பது எப்படி? மற்றவருடன் நாம் இடங்களை பகிர்ந்து கொள்வது எப்படி? ஒழுக்கம் என்பது என்ன? பொது நல சேவை என்பது என்ன உள்ளிட்ட விஷயங்கள் கற்று தரப்படும்.