உலகில் மிகவும் ஆபத்தான சில பழங்குடியினர் இன்னும் உள்ளனர், இருப்பினும் சமகால முன்னேற்றங்களிலிருந்து மிகவும் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடர்பில்லாத மனிதர்களில் சிலர் நற்குணமுள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும், மற்றவர்கள் நரமாமிச உண்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் சில விசித்திர மற்றும் நூதனமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்..
பிரேசிலின் அமேசானின் Satere-Mawe பழங்குடியின மக்கள் தங்கள் ஆண்மையை நிரூபிக்க ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டும். இந்த ஆபத்தான பாரம்பரியத்தை அவர்கள் இன்னும் பின்பற்றுகிறார்கள். Satere-Mawe பழங்குடியினர் தங்கள் மகன்களுக்கு வயதாகும்போது, அவர்கள் அதை முழு சமூகத்தின் முன் நிரூபிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்த விசித்திரமான சோதனையில் தேர்ச்சி பெறாதவரை இந்த இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது.
அதில் முதல் சோதனையாக பழங்குடியின இளைஞர்கள் தங்கள் கைகளை ஆபத்தான தேனீக்கள் நிறைந்த கையுறையில் வைக்க வேண்டும். இந்த தேனீக்கல் கடிக்கப்படும் வேதனையை இளைஞர்கள் சகித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் ஆண்மை நிறுபிக்கப்படுகிறது. அதன்பிறகு அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.
இந்த ஆபத்தான தேனீக்கள் முதலில் ஒரு தடிமனான கையுறையில் மூடப்பட்டிருக்கும். இந்த கையுறைகளில் தங்கள் கைகளை வைத்திருக்க வேண்டும்.. தேனீக்கள் கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் பல நாட்களாக, கையில் இருக்குமாம்.. இந்த விழாவிற்கு, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள்கள் தாங்களாகவே காடுகளில் இருந்து ஆபத்தான தேனீக்களை கொண்டு வந்து, மர கையுறைகளை உருவாக்கி, அவற்றை தேனீக்களின் மீது வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, பாரம்பரிய நடனம் மற்றும் பாடலுக்குப் பிறகு சிறுவர்கள் 20 முறை இந்தக் கையுறைகளை அணிய வேண்டும்..
இது 10 நிமிடங்கள் அணியப்படுகிறது. இந்த ஆபத்தான தேனீ கடித்தால் ஏற்படும் வலி ஒரு சாதாரண தேனீயின் வலியை விட 30 மடங்கு அதிகம் என்றும், வலி இல்லாமல் உலகில் எதுவும் நடக்காது என்பதை இந்த பயிற்சியின் மூலம் நிரூபிக்கவே இந்த விசித்திரமான பழக்கத்தை பின்பற்றுவதாக கூறப்படுகிறது