fbpx

திருமணமான ஆண்கள் தற்கொலை!… ஆண்கள் தேசிய ஆணையம்’ அமைப்பதற்கான பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஆண்கள் தேசிய ஆணையம் அமைக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி வெளிவந்த தகவலில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 81,063 திருமணமான ஆண்கள், 28,680 பேர் திருமணமான பெண்கள்.

இதில் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவிட கோரி, மற்றும் தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொல்லும் சம்பவங்களில் குடும்ப வன்முறைகளை கையாளுவதற்கான நெறிமுறைகள் வகுக்கவும், தேசிய ஆண்கள் ஆணையம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தது.

Kokila

Next Post

"ஜியோ பாரத்" 4 ஜி வசதியுடன் புதிய மொபைல்...! வெறும் 999 ரூபாய் தான்...! அசத்தும் ஜியோ நிறுவனம்...!

Tue Jul 4 , 2023
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய 4ஜி போனான “ஜியோ பாரத்” போனை ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தியது. குறைந்த பட்ஜெட் சாதனங்களுடன் பயனர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் 250 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் 2ஜி மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். அது போன்ற மொபைல்கள் இணைய வசதியை பெற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தை அணுகுவது ஒருவரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் […]

You May Like