fbpx

30 வயதுக்கும் மேல் திருமணம் செய்துகொண்டவரா?… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

30 வயது என்பது மனிதனின் விடலைப் பருவமெல்லாம் முடிந்து மனமுதிர்ச்சி அடைந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வயது. வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு சமூகத்தில் தனக்கான தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் வயது. அந்த வயதில் திருமணம் செய்வதற்கும் 20 – களில் திருமணம் செய்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கச் செல்லும் பருவம் என்பதால் தனக்கு என்ன தேவை என்கிற தெளிவு அவர்களுக்கு நிறையவே இருக்கும். 30 வருடம் வரையிலும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் இயல்பாகவே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். அதனால் உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கை துணையையும் எளிதாகப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முடியும்.

வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு வாழ்வதற்கான மனப்பக்குவம் 30 வயதில் நிறையவே வந்திருக்கும். வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள், ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கும். குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பெரிய திட்டமிடல் எதுவும் இல்லையென்றால் பிரச்சினை இல்லை. ஏனெனில் 30 வயதுக்கு மேல் மனிதர்களுடைய பயாலாஜிக்கில் கிளாக்கில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். அதை மனதளவில் உறுதியோடு இருந்தால் எளிதில் பிரச்சினையை எதிர் கொள்ளலாம். ஏனெனில் 30 வயதுக்கு மேல் கருத்தரிப்பது போன்ற விஷயங்களில் சிரமங்கள் ஏற்படும்.

குறிப்பாக சுகப்பிரசவம் உண்டாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிசேரியன் பிரசவத்துக்கு தான் வாய்ப்பு அதிகம். 20 வயதில் தன்னுடைய திறமையை முழுமையாக அடையாளம் கண்டு தனக்கு ஏற்ற வேலையையோ தொழிலையோ தேர்வு செய்வதில் கொஞ்சம் சிரமமும் பதட்டமும் குழப்பமும் இருக்கலாம். அதில் குடும்பத்தையும் சேர்த்து கவனிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் 30 வயதுக்குப் பிறகு மனத்தெளிவு இருக்கும்.

அதனால் தங்களுடைய எதிகால திட்டம், தற்போதைய நிலை எல்லாவற்றையும் புநிந்து தன்னுடைய தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கையாளும் பண்பு வந்துவிடும். 30 வயதுகளில் மனம் நிறைய பக்குவப்பட்டு இருக்கும். அதனால் 30 வயதுகளுக்கு மேல் மெச்சூரிட்டி அதிகரிக்கும். அதனால் குடும்ப வாழ்க்கை, சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகள் இரண்டையும் வெவ்வேறு சூழலில் கையாள்வதால் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.

Kokila

Next Post

பெண்களே பீரியட்ஸ் தள்ளிப்போகிறதா?… இதய நோய் வருமாம்?… எச்சரிக்கையுடன் இருங்க!

Mon Nov 20 , 2023
பெண்களின் கருப்பை ஹார்மோன்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இனப்பெருக்க நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது நரம்பு, எலும்பு மற்றும் இதயநல கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது. பெண்களின் பருவ வயதில் தொடங்கி, மெனோபாஸ் அடையும் தருணம் வரையிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு மிக முக்கியமானதாகும். ஆனால், மெனோபாஸ் அடைந்த பிறகு இந்த ஹார்மோன் உற்பத்தி நின்று விடும். அத்தகைய சூழ்நிலையில் […]

You May Like