fbpx

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரூ.3 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மணிமண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி இமானுவேல், கடந்த 1942ஆம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் என்றும் அதுபற்றிய தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வருமான வரி கணக்கு தாக்கல்..!! சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! அதிரடியாக களமிறங்கிய மத்திய அரசு..!!

Mon Sep 11 , 2023
வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அடுத்த அதிரடியை தற்போது கையில் எடுத்துள்ளது. வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும். வருமான வரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தியும் கூட, வரி ஏய்ப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, […]

You May Like