fbpx

இல்லத்தரசிகளே, உங்கள் மசாலா பொருள்களில் கலப்படம் உள்ளதா? தெரிந்து கொள்ள இதை மட்டும் செய்யுங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், கலப்படம் என்பது மிகவும் சாதாரனமான ஒன்றாக மாறிவிட்டது. பாலில் இருந்து பினாயில் வரை கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் வரும் ஆபத்துக்கள் ஏராளம். அந்த வகையில் சமையல் பொருள்களில் செய்யப்படும் கலப்படம், பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

அதிலும் குறிப்பாக, நம் அன்றாட சமையலுக்கு மிகவும் முக்கியமான மசாலாப் பொருட்களில் கலப்படும் செய்யும் போது, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சனை நமது முன்னோர்களுக்கு இருந்தது இல்லை. ஏனென்றால், நம் முன்னோர்கள் பெரும்பாலும் மசாலாப் பொருட்களை வீட்டிலேயே அரைத்து சமையலில் பயன்படுத்தினர். அவர்கள் நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக இருந்ததற்கு அதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆனால், பேக்கேஜ் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை பயன்படுத்தும் நாம் தான் பெரும் சவால்களை சந்திக்கிறோம். ஏனென்றால், கலப்படமான, அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது. ஆனால் இப்போது சமீப நாட்களாக, வீட்டில் சுத்தமாகவும், கலப்படம் இல்லாமலும் மசாலா பொருள்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெருகி விட்டனர். அதனால், நாம் விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல் மசாலா பொருள்களில் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்து பார்த்து வாங்குவது நல்லது.

அப்படி நாம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் கலப்படம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளதா என்று கண்டறிய ஒரு சில வழிகள் உள்ளது. இதற்க்கு முதலில், ஒரு கண்ணாடி டம்ளரில் நீங்கள் சோதிக்க விரும்பும் மசாலாவை ஒரு சிறிய அளவு எடுத்து தண்ணீரில் கலக்கவும். தூய மசாலாப் பொருட்கள் தண்ணீரில் வண்ணம் சேர்க்கமால் கீழே செல்லும், அதே சமயம் கலப்படம் செய்யப்பட்டவை மேலே மிதக்கலாம் அல்லது தண்ணீரின் நிறத்தை மாற்றலாம், இது கலப்படங்கள் அல்லது செயற்கை வண்ணங்களைக் குறிக்கிறது.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் மசாலாவை போட்டு சூடாக்கவும். தூய மசாலாப் பொருட்கள் அவற்றின் நறுமணத்தைத் தக்கவைத்துக் கொள்ளும், அதே சமயம் கலப்படம் செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் ஒரு இரசாயன வாசனையை வெளியிடலாம் அல்லது நிறம் மாறலாம், இது மசாலாப் பொருட்கள் தரமற்றவை என்பதக் குறிக்கிறது.

எண்ணெயில் சிறிது மசாலாவை சேர்க்கவும். தூய மசாலாப் பொருட்கள் எச்சமின்றி எண்ணெயில் முழுமையாக கரைந்துவிடும், அதே சமயம் கலப்படம் செய்யப்பட்டவை அடுக்குகள் அல்லது எச்சத்தை உருவாக்கலாம், இது கலப்படங்கள் அல்லது செயற்கை கூறுகள் இருப்பதைக் குறிக்கிறது. இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி நீங்க உங்கள் மசாலா பொருள்கள் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.

Read more: பெற்றோர்களே கவனம்!! தாயின் அஜாக்கிரதையால் துடிதுடித்து உயிரிழந்த பிஞ்சு குழந்தை..

English Summary

masala-quality-check-at-home

Next Post

இனிதான் சம்பவம் இருக்கு.. இன்னும் இரண்டு நாட்களில் கனமழை சூடு பிடிக்கும்..!! - வெதர்மேன் வார்னிங்

Sun Nov 10 , 2024
Tamilnadu Weatherman Pradeep John has published a forecast of what will happen in Tamilnadu weather today.

You May Like