fbpx

மாஸ் உத்தரவு..!! உங்கள் பத்திரங்கள் நிலுவையில் உள்ளதா..? சார் பதிவாளர்கள் மீது பாயும் நடவடிக்கை..!!

உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

பத்திரங்களை பதிவு செய்யும் போது சில பத்திரங்களை சார் பதிவாளர் நிலுவையில் வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சர்ச்சையான பத்திரங்கள், பட்டாவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம், இணைய வழியில் பட்டா குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பத்திரங்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ”பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, ‘ஸ்டார் 2.0 ‘மென்பொருளில், ‘டிராப் டவுன் பாக்ஸ்’ என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும். ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், ஒரு பத்திரம் நிலுவையில் வைக்கப்படும் நிகழ்வில், அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் பெறப்பட்டு இருக்க வேண்டும். நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும்.

பட்டாவின் உண்மை தன்மை சரிபார்ப்பு தேவைப்படும் நிகழ்வில், இணையதளம் வாயிலாக விவரங்களை சரிபார்த்து, பத்திரத்தை திருப்பித்தர வேண்டும் .இணைய வழியில் பட்டா தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு கடிதம் எழுதி உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும். இது தொடர்பான கடிதப் போக்குவரத்து பிரதிகளை, ஆவணதாரருக்கும் அனுப்ப வேண்டும்.

முடக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ள பத்திரங்களில், மதிப்பு நிர்ணயம், கட்டட களப்பணி போன்ற பணிகளை, 15 நாட்களுக்குள் முடித்து உயரதிகாரிக்கு அனுப்ப வேண்டும். முடக்கம் செய்ய வேண்டிய பத்திரம் தொடர்பான குறிப்புகள் வந்ததில் இருந்து 15 நாட்களுக்குள், காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை ஆவணதாரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். கடிதம் அனுப்பி 15 நாட்களில் ஆவணதாரரிடம் இருந்து உரிய பதில் வராத நிலையில், அந்த ஆவணம் முடக்கப்பட்டதற்கான அறிவிப்பை பிறப்பிக்கலாம்.

இதில் உரிய நடைமுறைகளை பின்பற்றி 3 மாதங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், பொறுப்பு நிலையில் உள்ள சார் பதிவாளர், உதவியாளர்கள் முடக்க ஆவணம் குறித்த விவரங்களை காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் உயரதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாத சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை தெளிவான விளக்கம்..!! மாணவர்களே இதை நோட் பண்ணீங்களா..?

Chella

Next Post

சந்திரமுகியாக மாறிவிட்டார் சந்திரபாபு நாயுடு!… ரத்தத்தை குடித்துவிடும்!… ஜெகன்மோகன் ரெட்டி விளாசல்!

Fri Apr 5 , 2024
Andhra: கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் இரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக தாக்கி பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருப்பதி மாவட்டம் குருராஜுபள்ளியில் இருந்து தொடங்கி காளஹஸ்தி வழியாக நாயுடுப்பேட்டையில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் 8வது நாள் பேருந்து யாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது நடந்த பிரசார மாநாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: முதியோர்களுக்கு மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு […]

You May Like