தெலுங்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தனெக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இவரது நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கும் வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த பஞ்ச் டயலாக், ரத்தம் தெறிக்க அக்ஷன் காட்சிகள், தெறிக்கவிடும் நடனம் என ட்ரைலரில் மாஸ் காட்டி இருக்கிறார்.
இந்த வீர சிம்மா ரெட்டி படத்தின் பர் ரிலீஸ் ஈவென்ட் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சங்கராந்தி பண்டிகைக்கு ஜனவரி 12ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், வீர சிம்மா ரெட்டியில் கன்னட நட்சத்திரம் துனியா விஜய்யும் வில்லனாக நடித்துள்ளார். ஹனி ரோஸ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் கர்ஜிக்க உதவுவார் என்று நம்புகிறார்.