fbpx

மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்ப பெரும் கால அவகாசமும் தற்போது முடிந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மதிமுக சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

’ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Sat Mar 30 , 2024
ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் […]

You May Like