fbpx

மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை..!! மொத்தம் 60 நாட்கள்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக இருந்தால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 60 நாட்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிடி அரவிந்த் குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை..!! மொத்தம் 60 நாட்கள்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பின்படி மகப்பேறு விடுமுறையை பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்திற்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முதல் அல்லது இரண்டாவது கர்ப்பத்திற்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்றும் ஒரு மாணவிக்கு ஒரு முறை மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி..!! நடந்தது என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sun Dec 25 , 2022
தன் கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து, தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் செயலி வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்நிலையில், தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியை இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த இளைஞரின் வீட்டிற்கு மாணவி […]
கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி..!! நடந்தது என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

You May Like