fbpx

மாத்தி மாத்தி ட்விஸ்ட்!… இந்த விஷியத்துல தோனிக்கு நிகர் அவரேதான்!… பைனலில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்!… ஹர்திக் ஓபன் டாக்!

பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் தோனிக்கு நிகர் அவர் தான், அவரை போன்று பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம் எனவும் இறுதி போட்டியில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 70 போட்டிகள் கொண்ட 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், டீவன் கான்வே 40 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது.இதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில்லை (42) தவிர அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுத்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரசீத் கானும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சின் போது கூடுதலாக 15 ரன்கள் விட்டுகொடுத்ததே தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “பந்துவீச்சில் நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். பந்துவீச்சில் நாங்கள் பலமாக இருந்த போதிலும், 15 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம். 15 ரன்கள் கூடுதலாக வழங்கியதே எங்களது தோல்விக்கான காரணமாகவும் அமைந்துவிட்டது. நாங்கள் எங்களது திட்டங்களை சரியாகவே செயல்படுத்திய போதிலும், சற்று கூடுதலாக ரன்களை வழங்கிவிட்டோம். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு எங்களுக்கு மற்றொரு வாய்ப்பும் இருப்பதால் நிச்சயம் தவறுகளை திருத்தி கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம். பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் தோனிக்கு நிகர் அவர் தான், அவரை போன்று பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம். தோனி அடிக்கடி பந்துவீச்சாளர்களை மாற்றி கொண்டே இருந்தார், நாங்களும் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். நிச்சயமாக இந்த தோல்விக்கு தோனியும் முக்கிய காரணம் தான். இறுதி போட்டியில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Kokila

Next Post

ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல்முறையாக நீரஜ் சோப்ரா முதலிடம்!... உலக சாதனை படைத்து அசத்தல்!

Wed May 24 , 2023
ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதலில் (ஜாவ்லின் த்ரோ) உலக அளவில் முதன்முறையாக முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அவரது ஈட்டி எறிதலில் முக்கிய மைல்கல் சாதனையாகும். நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை […]

You May Like