மத்திய பிரதேசத்தில் உள்ள பெதள் மாவட்ட பகுதியில் வெறும் 300 ரூபாய்க்காக இரு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலை அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமேஷ் ககோடியா எனும் நபர் தனது சகோதரரின் மனைவிக்கு கடனாக 300 ரூபாயை கொடுத்து இருக்கின்றார். இதன் காரணமாக ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் சுமன் சிங் ககோடியா இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குழாயை எடுத்து தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.
இதில் ரமேஷின் தம்பி சுமன் சிங் ககோடியா பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமன் துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
இந்த தகராறு நடைபெற்ற போது சுமன் மற்றும் ரமேஷ் இருவருமே நல்ல போதையில் இருந்துள்ளனர். தம்பியை கொலை செய்துவிட்டு அண்ணன் ரமேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது