fbpx

‘யானை பலம்’ பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி தேர்வு..!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாக இருப்பவர் மாயாவதி. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி பதவி வகித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சி ராமால் இருவது ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வாரியாக அறிவிக்கப்பட்டவர். 68 வயதான மாயாவதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அவர் இதை திட்டவட்டமாக மறுத்து இந்த தகவல்களை பரப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; அதிர்ச்சி..!! முன்னாள் WWE வீரர் சிட் விசியஸ் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

English Summary

Bahujan Samaj Party elects Mayawati as National President again.

Next Post

நடிகைகள் மீதான பாலியல் குற்றங்கள்..!! மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள்..!! கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு..!!

Tue Aug 27 , 2024
Why is the media asking about this? He argued with the journalists.

You May Like