fbpx

”பேயா இருக்குமோ”… ”கொஞ்சம் முன்னாடி வாங்க”..!! கொலையானவர் நேரில் ஆஜராகி சாட்சியம்..!! அரண்டுபோன ஹைகோர்ட்..!!

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம், இயந்திர தனமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததாக கீழமை நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்தது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஏழுகிணறு போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் கொலை மிரட்டல் என வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, 3-வது முறையாக பிரிவில் மாற்றம் செய்த போலீசார், கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அந்த 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நந்த கிஷோர் சந்தக் தனது சித்தப்பா எனவும், தங்களுக்கிடையே குடும்ப சொத்து பாகப்பிரிவினை பிரச்சனைகள் காரணமாகவே இந்த புகார் அளித்துள்ளதாகவும், தற்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் ராதேஷ் சியாம் சந்தேக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராதேஷ் தரப்பு வழக்கறிஞர், நந்த கிஷோர் சந்தக் கொலை செய்யப்படவில்லை எனவும் அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகவும் கூறினர். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உள்ள நிலையில் பின்னர் எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நந்த கிஷோர் சந்தக்-கை பார்த்து “கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்” என நகைச்சுவையாக கூற அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாக்கும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், இயந்திர தனமாக செயல்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

அலுவலக பணியாளர்களே எச்சரிக்கை!… இதய பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணமே!

Thu Sep 28 , 2023
இன்றைய காலத்தில் அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பலரும், உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பெருமளவில் உடல் இயக்கத்திற்கான தேவைகள் ஏற்படுவதில்லை. கேட்பதற்கு மிகவும் சாதரணமான ஒன்றாக தோண்டினாலும் இவை சிறிது சிறிதாக நம்முடைய இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டோ அல்லது உடல் இயக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலத்திற்கு நாம் […]

You May Like