fbpx

BJP: ஆபாச படம் வெளியிடுவேன்… ஆதீனத்தை ரூ.20 கோடி கேட்டு மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது…!

ஆபாசப்படத்தை வெளியிட்டு விடுவேன் என தருமபுரம் ஆதீனத்தை ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டிய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக, பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தனர்.

English Summary : Mayiladuthurai BJP District President Akhoram Arrested for Threatening Dharumapuram Atheenam with Rs 20 Crores.

Vignesh

Next Post

Admission | நாளை முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..!! வெளியான குட் நியூஸ்..!!

Thu Feb 29 , 2024
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் […]

You May Like