fbpx

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு!… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!… முழுவிவரம் இதோ!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு ஆகஸ்ட் 7 முதல் 11ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Kokila

Next Post

கவனம்...! TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...! மிஸ் பண்ணிடாதீங்க...

Mon Jul 31 , 2023
காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ வழியாக பல்வேறு மத்திய மற்றும்‌ மாநில அரசு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ விரைவில்‌ அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1 மற்றும்‌ தொகுதி-2 முதல்‌ நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்‌ 17.07.2023 […]

You May Like