எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகின்றது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வகள் நிறைவடைந்ததை அடுத்து 7ம் தேததி முடிவுகள் வெளியானது. மருத்துவப் படிப்புகளில் மாணவர்சேர்க்கை நடத்துவதற்கா அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 67,000 மாணவர்களின் முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை தமிழகத்திற்கு அனுப்பவில்லை. இதனால் கலந்தாய்வுக்கான பணிகள் தாமதமாகின்றது. ஆன்லைன் விண்ணப்ப பதவு ஓரிநாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் இது குறித்த முடிவு வெளியிடப்படம் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியுள்ளனர். …. கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவதற்கும் , நேரடியாக நடத்துவதற்கும் , தயாராக இருப்பதாகவும் , அரசு எப்படி நடத்த வேண்டும் என உத்தரவிடுகின்றதோ அந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்றஅதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்