fbpx

கொசுவால் ஏற்படும் டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி….?

உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கொசு கடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு என்று தனியாக கொசுவலை வாங்கி அதை பயன்படுத்துவது இயல்பான விஷயம்தான். ஆனால் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை எல்லோரையும் இந்த கொசு தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது.

இந்த நிலையில் தான், தற்போது நாடு முழுவதும் பருவ மழை தொடங்கியிருப்பதால், டெங்கு குறித்து பயமும் பொதுமக்கள் இடையே பரவத் தொடங்கி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக பரவத் தொடங்கிய இந்த டெங்கு காய்ச்சல், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு, இந்த காய்ச்சலுக்கு உயிரை கொள்ளும் அளவிற்கு தீவிரம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு டெங்கு கொசு உருவாவதை தடுத்துவிட்டால், நம்மால் நிச்சயம் அந்த டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

அதாவது, இந்த டெங்கு கொசு என்பது மழை நீர் தேங்கி இருந்தால் அந்த மழை நீரிலிருந்து உருவாகும். அதோடு, ஏதாவது ஒரு பாத்திரத்திலோ அல்லது தொட்டியிலோ வெகு நாட்களாக நீரை சேமித்து வைத்திருந்தால் அதன் மூலமாகவும், இந்த டெங்கு கொசு உருவாகும். அதோடு, தங்களுடைய வீடுகளுக்கு அருகே வெகு நாட்களாக சாக்கடை நீர் தேங்கி இருந்தால், அதன் மூலமாகவும் இந்த டெங்கு கொசு உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களிலும் மக்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகிறது. அப்படி அலட்சியமாக இருந்துவிட்டால் இது போன்ற செயல்களால் ஏற்படும் டெங்கு கொசு வெளியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், தங்களையும் தாக்கக்கூடும். அதனால் டெங்கு காய்ச்சல் பரவலின் அபாயம் அதிகரித்து விடும்.

இந்த டெங்கு கொசு ஒருவேளை நம்மையும் அறியாமல் ஏற்பட்டு விட்டால் அதனை விரட்டுவது எப்படி என்று தற்போது நாம் பார்க்கலாம். கொசு நம்மை கடிக்காமல் இருக்க கைகள் மற்றும் கால்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை க்ரீம்களை தடவிக் கொள்ளலாம். அதோடு, கடைகளில் விற்கப்படும் கொசு விரட்டும் திரவங்களை வாங்கி வந்து அதனை பயன்படுத்தி அதன் மூலமாக கொசுவை விரட்டலாம். ஆனால் இதில் மிகவும் கவனமுடன் செயல் படுவது மிகவும் அவசியம். குழந்தைகள் இருக்கின்ற வீடுகளில் அந்த திரவங்கள் குழந்தைகள் கையில் படும் இடங்களில் வைக்கக்கூடாது.

இதெல்லாம் சாதாரண பாமர மக்களுக்கு பெரிதாக தெரிவதற்கான வாய்ப்பில்லை. ஆகவே படித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள் நம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், ஒரு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொல்லி, அவர்களிடையே டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் நீங்கள் செய்வது பொதுத் தொண்டாகவும், பல்வேறு உயிரை காப்பாற்றிய பெருமையும் உங்களைத்தான் சேரும். ஆகவே விவரம் அறிந்த அனைவரும் இதில் கவனமாக இருங்கள். மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த வரையில் பரப்புங்கள்.

Next Post

அரசு அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை..! நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு இது ஒரு செய்தி..! உயர்நீதிமன்றம் அதிரடி..

Fri Aug 4 , 2023
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவருக்கு 1 மாத சிறை தண்டனை சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 20கோடிஅளவில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் உண்மையான […]

You May Like