fbpx

வினேஷ் போகத்துக்கு பதக்கம்..? இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம்..!!

வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

33-வது ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார். மேலும், என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஆகஸ்ட் 8ஆம் தேதி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார். வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

இந்த வழக்கு 9ஆம் தேதி நீதிபதி அனபெல் பெனட் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். மேலும், இந்த வழக்கில் 10ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று (11.8.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Read More : நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகை இல்லை!. ஏன் தெரியுமா?

English Summary

The Court of Arbitration for Sport has adjourned the verdict on Vinesh Phogat’s appeal case to August 11.

Chella

Next Post

உஷார் மக்களே!. வளர்ப்பு நாயின் சின்ன கீறல்தான்!. பெண்ணின் உயிரை பறித்த சோகம்!.

Sun Aug 11 , 2024
Be careful people! A pet dog's small scratch! The tragedy that took the woman's life!

You May Like