ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக எழுந்த புகாரில் சீமா பிஸ்லாவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மற்றும் 2021 ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா, ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் 30 வயதான சீமாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்து ஊக்க மருந்து தடுப்பு மையம் உத்தரவிட்டுள்ளது. அவரது தடை காலம் இந்த ஆண்டு மே 12 அன்று தொடங்கியதாக தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீமா வெண்கலம் வென்றார். அவர் 2021 இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் போட்டியில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.