fbpx

புற்று நோயை குணப்படுத்தும் அதிசய பூ..!

தற்போதுள்ள கால கட்டத்தில் உலக்ம் முழுவதும் பலரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகொண்டு வருகின்றனர். சிலர் புற்று நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் போகின்றனர். இந்த புற்று நோயை அழிக்கும் மருந்தாக பீவர் பியூ என்று அழைக்கபடும் செவ்வந்தி பூ பயன்படுகிறது என்று பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பூவை பயன்படுத்தி புற்று நோயாளிகளை பாதிக்கும் லுக்கேமியா செல்களை முழுவதுமாக அழிக்க மருந்துகளை உருவாக்கலாம். செவ்வந்தி பூவின் இலைகளில் பார்த்தினோலைடு என்ற வேதிப்பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பர்மிங்காம் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஒற்றைத் தலைவலி மற்றும் பிற உடல் வலிகளுக்கும் 100 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அதிசய பூவாக இருந்து வருகிறது. சளி மற்றும் திடீர் காய்ச்சலுக்கு அருமருந்தாக இருந்து வரும் இந்த பூவை காய்ச்சல் குறைப்பான் என்றும் அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த பூவை பயன்படுத்தி எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்று நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிவுக்கு வந்து எலும்பு மஜ்ஜை புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தின் அடுத்த கட்ட பரிசோதனைக்கு பிறகு மனிதர்களுக்கு தரப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Rupa

Next Post

BREAKING: பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது.! பிரதமர் மோடி அறிவிப்பு.!

Tue Jan 23 , 2024
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமூக நீதிப் போராளியுமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க இருப்பதாக பிரதமர் மோடி தனது ‘X’ வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த கௌரவத்தை வழங்குவதில் தேசம் பெருமைப்படுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் பிற்படுத்தப்பட்டவர்களின் […]

You May Like