கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், ஹீரா, எஸ்.பி.பி. உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருந்தார் மீனா. அந்த படத்தில் நடித்தது பற்றி மீனா பேட்டி ஒன்றில் கூறியதாவது, அவ்வை சண்முகி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது, கமல் ஹாசனின் ஒவ்வொரு படத்திலும் முத்தக் காட்சி இருக்கும் என்று எனக்கு தெரியும். இன்று முத்தக் காட்சியை படமாக்குகிறோம் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் கூறியதும் எனக்கு பயமாகிவிட்டது.
கேரவனுக்கு ஓடிப் போய் அம்மாவிடம் சொன்னேன். அழுகையே வந்துவிட்டது. ஆனால் ஷூட் நேரம் வந்தபோது முத்தம் கொடுப்பது போன்று கமல் என் அருகில் வந்து முத்தக் காட்சி இல்லை என்றார். அதை கேட்டு நான் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன் என்றார்.
ரொம்ப டென்ஷனாக இருக்கும்போது அவ்வை சண்முகி படம் பார்த்தால் சந்தோஷமாக சிரித்துவிடுவீர்கள். அது தான் அந்த படத்தின் ஸ்பெஷலே. கணவர் வித்யாசாகரை இழந்த மீனா தற்போது தான் அதில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறார். மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.