fbpx

நடிகை மீரா மிதுன் பெங்களூரில் உள்ளார்… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்..

நடிகை மீராமிதுன் பெங்களூரில் இருப்பதாகவும் விரைவில் அவரை கைது செய்வோம் எனவும் காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேற்றம் குறித்து சமூக வலைத்தலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அவரது நண்பர் சாம் அபிஷேக் உடந்தை என்ற புகாரும் எழுந்தது. மீரா மிதுன் மற்றும் சாம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஜாமீன் பெற்று விடுதலையானார்கள். இவர்களுக்கு எதிராகசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது. மீரா மிதுன் ஆஜராகவில்லை எனவே நீதிபதி அல்லி அவரை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.  

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினர் , நீதிமன்ற உத்தரவின்படி , மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடினோம் அவர் அங்கு இல்லை. விசாரணை நடத்தி அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்தோம். தற்போது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Post

இது இந்தியா தான் ’ஹிந்தி’யா அல்ல – முதல்வர் ஸ்டாலின் … அமித்ஷாவின் பேச்சுக்கு எடும் எதிர்ப்பு …

Wed Sep 14 , 2022
’’ இந்தி படிங்க ’’ என அமித்ஷா பேசியது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியா தான் ’’ஹிந்தியா ’’ அல்ல எனவும் அழுத்தமாக கூறியுள்ளார். அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் முலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ’’ ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை ’ஹிந்தியா ’ என்ற பெயரில் பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம் . தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக […]

You May Like