ஜி20 நாடுகளுக்கு இந்திய தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இதேபோல் நாடு முழுக்க 118 கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.
சுற்றுலா என்ற தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.