ஜப்பான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டதட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு எச்சரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், ஜப்பான் அரசாங்கத்தின் அறிக்கை பீதியை கிளப்பியுள்ளது. அதாவது, ஜப்பான் அந்நாட்டில் மெகா பூகம்பம் ஏற்படும் என்பது குறித்து எச்சரித்துள்ளது. இதனால் சுனாமி உள் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டு 3 லட்சம் மக்கள் இறக்கக் கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்த பேரழிவால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 270.3 ட்ரில்லியன் எண் பொருளாதார சேதம் ஏற்படும். அதன்படி, கடற்பரப்பு மண்டலத்தில் 8 முதல் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. நிபுணர்களும், அதிகாரிகளும் இதுகுறித்து எச்சரிக்கும்போது, மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை தொடரவும், அவசர நிலைக்கு தயாராகவும் வலியுறுத்தியுள்ளனர்.
மோசமான சூழல் ஏற்பட்டு இந்தப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜப்பானில் 1.23 மில்லியன் மக்கள் அல்லது அதன் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. குளிர்கால இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி மற்றும் கட்டிட ஈடுபாடுகளால் 2 லட்சம் 98 ஆயிரம் பேர் வரை இறக்க நேரிடும் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 9ஆக பதிவானது. இதனால் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிவிபத்தால், 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More : ’எங்களுக்கு அதிமுக கூட்டணி வேண்டாம்’..!! ’அண்ணாமலை தான் வேண்டும்’..!! பரபரப்பை கிளப்பிய பாஜக போஸ்டர்..!!