fbpx

மெகா காலியிடங்கள்..!! மத்திய அரசு வேலை..!! இளைஞர்களே உடனே விண்ணப்பியுங்கள்..!!

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 வகைமைகள் (10+2 Higher Secondary ) மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவர்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்ப செயல்முறை:

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி – 06.03.2023

இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் – 27.03.2023

இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் – 28.03.2023

கணினி வழித்தேர்வு – ஜூன் – ஜுலை 2023

Chella

Next Post

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்திற்கு புதிய இணையதளம்...!

Tue Mar 14 , 2023
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்திற்கு புதிய இணையதளம். இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று அவர் கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சாம்பியன் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைப் போட்டித் திட்டம் (LEAN) தொடங்கப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் […]

You May Like