fbpx

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்…! SBI-யின் புதிய ஒப்பந்தம்…!

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது தொடர்பாக தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e.NRS) ஈடான, பிரத்யேக நிதியத்திற்குரிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் என்றழைக்கப்படும் புதிய வகை கடன் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில், செயல்பாட்டுக் கட்டணங்களோ, கூடுதல் பிணையங்களோ இருக்காது என்பதுடன் இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், விவசாயக் கடன்கள் தொடர்பான உறுதியை அதிகரிப்பதுடன்ஈ விவசாய டெபாசிட்தாரர்களுக்கு இவற்றின் பலன்களை எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது கிராமப்புற கடன்களை அதிகரிப்பதற்கு கிடங்கு ரசீதுகளைப் பயன்படுத்தும் அறுவடைக்குப் பிந்தைய கடன் வசதிகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இத்துறையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களை வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கையை மேம்படுத்த முழுமையான ஒழுங்குமுறை ஆதரவு வழங்கப்படும் என கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் உறுதி அளித்தது.

Vignesh

Next Post

அதிர்ச்சி செய்தி...! திடீரென 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு...! ‌

Tue Jan 17 , 2023
MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் பிரச்சனை நிறைந்த காலகட்டத்தில் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்தப் […]
மாதம் ரூ.75,000 சம்பளம்..!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like