fbpx

திருமணத்திற்கு தயாராகும் ஆண்களே..!! இந்த அரிசியை மறந்துறாதீங்க..!! அந்த விஷயம் இதுல இருக்கு..!!

நாம் சாப்பிடும் அரிசியில் 20 ஆயிரத்துக்கும் மேல் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் சில ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்கள் மட்டுமே உள்ளன. அவை சீரக சம்பா, காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா, சிவப்பு அரிசி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையான பாரம்பரிய அரிசிகள் நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதில் பெருமளவு உதவுகிறது. அந்த வகையில், இந்தப் பதிவில் நாம் மாப்பிள்ளை சம்பா அரிசியை குறித்து பார்க்கலாம்.

மாப்பிள்ளை சம்பா:

இந்த அரிசி அதன் பெயருக்கு ஏற்றார் போல புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் அவசியம். ஏனெனில், இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இந்த அரிசி வளரும் ஆண் பிள்ளைகளுக்கு ஏற்றது. இந்த அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாக சத்துகள் அடங்கி இருக்கின்றன.

இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ஆண்மை பலப்படுத்தும். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் இதற்கு ஏன் மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தார்கள் என்று. இதில் இந்த சத்து மட்டுமல்லாமல், வேறு பலவகையான பலன்களுக்கும் இது உதவுகிறது. சமீப காலமாக முறையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது தவிர ஓய்ந்த பாடில்லை. “உணவே மருந்து” என்ற பழமொழி உண்டு. இது நோய்களுக்கு மட்டுமல்ல ஆண்மை குறைபாட்டுக்கும் தான். அந்த வகையில், இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஆண் தன்மை அதிகரிக்கவும், உடலுக்கு பலம் கொடுக்கும் சத்துகள் இருக்கிறது. ஆகையால், ஆண்மை குறைபாடு உள்ள ஆண்கள் தினமும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலுக்கு வலு கொடுக்கும். பின் ஒரு மாதம் கழித்து அதற்கான பலனை நீங்கள் உணர்வீர்கள்.

மேலும், நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவை நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுபோல் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த அரிசியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக இந்த அரிசியில் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் சீராக வைக்கவும், இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக, இதில் இருக்கும்
அதிகப்படியான நார்ச்சத்து புற்று நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

Chella

Next Post

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு "டெங்கு பாசிட்டிவ்"..? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்..!

Fri Oct 6 , 2023
ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் பங்கேற்பது கேள்விக்குறி தான் என்று கூறப்பட்டுள்ளது.இந்தியாவின் துவக்க […]

You May Like