fbpx

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி!… வரலாற்றில் முதல்முறையாக பெண் நடுவர் பங்கேற்பு!

நியூசிலாந்து – இலங்கை இடையேயான ஆண்கள் டி20 போட்டியில் பெண் நடுவராக பங்கேற்றுள்ளார். ஆண்களுக்கான போட்டியில் பெண் நடுவர் பங்கேற்றது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆண் நடுவர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பெண் நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் ஒருவர் நடுவராக பங்கேற்றுள்ளார். நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் நடைபெற்றது. இந்த போட்டில் நியூசிலாந்து அணி, 14.4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து இலங்கை அணியை வென்றது. ஆண்களுக்கான இந்த போட்டியில் முதல்முறையாக நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் என்ற பெண் நடுவராக பங்கேற்றார்.

இந்த போட்டியில் கிம் காட்டன் பங்கேற்றதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற சாதனையை படைத்துள்ளார். காட்டன், 2018ம் ஆண்டு முதல், பெண்களுக்கான 54 டி20 போட்டிகள் மற்றும் பெண்களுக்கான 24 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது – சென்னை மாநகராட்சி அதிரடி!

Thu Apr 6 , 2023
நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, இன்று காலை குளத்தில் இறங்கியபோது இளைஞர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் […]

You May Like