fbpx

இடம் மாறும் புதன்..!! 2025இல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! இனி பணமழைதான்..!!

2025 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளன. 2025 கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. வருடப் பிறப்பிலேயே புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த அமைப்பு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழும். ஜனவரி முதல் வாரத்தில் புதன் கிரகம் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

2025 மார்ச் 29ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 52 நாட்களுக்கு சூரியன், புதன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய 5 கிரகங்கள் ஒன்றாக பயணிக்கவுள்ளன. இது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதனால் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியையும் உற்று கவனிக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்திலேயே நிகழப் போகும் முதல் பெயர்ச்சி புதன் கிரகத்தின் பெயர்ச்சி தான். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அப்படி என்னென்ன ராசிகள் புதன் பெயர்ச்சியால் பயனடைய போகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் : இந்த ராசிக்கு ஐந்தாம் இடத்தில் புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால், இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. பணி, தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதல், திருமண வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியால் இனிக்கும்.

துலாம் : இந்த ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இனி உங்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும். உயரதிகாரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அதனால், பதவி உயர்வுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய பணி, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்கு உகந்த காலகட்டம். உங்களின் உடன்பிறந்தவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கும்பம் : இந்த ராசிக்கு 11-வது இடத்துக்கு புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த பழைய முதலீட்டில் இருந்தும் லாபம் கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். சவாலான பணிகளை கூட எளிமையாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பு கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் தொழில்களை தொடங்குவதற்கு இது சரியான காலகட்டம். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் உங்களிடம் இணைவார்கள்.

Read More : இந்த 3 பொருள் இருந்தால் கெட்ட கொழுப்பு, உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்..!! வீட்டிலேயே செய்யலாம்..!!

English Summary

In this post, we will see which zodiac signs will benefit from Mercury’s transit in 2025.

Chella

Next Post

Tn Govt: 21 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம்...!

Tue Dec 24 , 2024
Scheme to provide free wipes to people between the ages of 21 and 45

You May Like