fbpx

மெய்சிலிர்க்க வைக்கும் ஆனைமலை நரசிம்மர்.. இந்த கோவில் எப்படி உருவானது தெரியுமா..?

மதுரை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தக்கடை ஊராட்சி யானைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தான் இந்த யோக நரசிம்மர் திருக்கோயில். பகவான் ஶ்ரீ விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்கு தான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அவ்வாறு இங்கு விஷ்ணு பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும் இது சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் இங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.

கட்டிடக்கலையில் கை தேர்ந்த பல்லவர்கள் இந்த கோவிலை கட்டியதாகவும், அதன் பின் மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்கள் இந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் இறைவியாக நரசிங்கவல்லி இருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.

நரசிம்மர் கோவில்கள் பலவற்றுள் மிகப் பெரும் நரசிம்ம மூலவர் விக்ரகம் இந்த கோவிலில் தான் அமைந்துள்ளது. ரோமச முனிவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி விட்டு யாகம் மேற்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. அவர் நரசிம்ம மூர்த்தியை அவருடைய அவதார ரூபமான உக்கிர நரசிம்ம தோற்றத்தில் தரிசனம் செய்ய விருப்பப்பட்டார். அதை நிறைவேற்றும் விதமாக நரசிம்ம மூர்த்தியும் களத்தில் இறங்கினார். 

அவரது உக்கிரமான வெப்பம் உலோகங்களை அழித்துவிடுமோ என்று தேவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மகாலட்சுமிடம் சென்று உதவி கேட்க தாயார் லட்சுமி வந்து நரசிம்மரை அரவணைத்து அவரது உக்கிரத்தை போக்கியுள்ளார். அதன் பின்னர் யோக நரசிம்மராக மாறிய அவர் ரோமச முனிவரின் வரத்தை நிறைவேற்றினார். இந்த கோவிலில் தேய்பிறை பிரதோஷ காலங்களில் மிகவும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் கல்வி பயிலுகின்ற மாணாக்கர்கள் இந்த கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இங்கு உள்ள நரசிங்கவல்லி தாயாரை வணங்கும்போது திருமண தடை, திருமண தாமதம், குழந்தை இன்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகளுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இங்கு, நரசிம்மர் மற்றும் தாய் நரசிங்கவல்லி இருவருக்கும் வஸ்திரங்கள் சாற்றும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் போவது போல இந்த கோவிலில் உள்ள ஆனைமலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். பௌர்ணமி தினத்தில் தான் இந்த கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.

கோவில் அமைவிடம் : மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், மதுரையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆனைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர் கோயிலை அடையலாம்.

Read more ; “கர்ப்பத்தை கலைங்க” நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு; வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

English Summary

Mesmerizing Anaimalai Narasimha.. Do you know how this temple came into being..?

Next Post

தமிழகம் முழுவதும் இன்றும் பள்ளி & கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை...!

Fri Jan 17 , 2025
The Tamil Nadu government has declared a holiday for all educational institutions today.

You May Like