உலக கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கிளப்பில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது இன்டர் மியாமி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்டர் மியாமி கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இண்டர் மியாமிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸியின் முடிவு குறித்து பார்சிலோனாவின் கால்பந்து அணி அதிகாரப்பூர்வ அறிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
மெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) விருதையும் வென்றார். பின், ஆகஸ்ட் (2021-இல்) பார்சிலோனா கால்பந்து கிளப்பிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில்(பிஎஸ்ஜி) சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக 71 போட்டிகளில் விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார்.