ஆசிய கண்டத்தின் அற்புதமான சில நாடுகளில் பிலப்பைன்ஸும் ஒன்று. இங்கு இரவு வானத்தை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அதாவது, ஒளி மாசு குறைவாக இருக்கும் பகுதியில்தான் பிரபஞ்சத்தின் சில பகுதிகளை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அந்த வகையில், பிலிப்பைன்சில் வானம் இப்படித்தான் வழக்கமான இருளாக இருந்தது. ஆனால், திடீரென சூரியனை போன்ற வெளிச்சம் தோன்றி மறைந்திருக்கிறது.
பலருக்கும் இந்த வெளிச்சம் எப்படி வந்தது என்பது புரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ’2024 RW1’ எனும் விண்கல் பூமியின் மீது மோதியதன் விளைவாகவே இந்த வெளிச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இப்படி ஒரு விண்கல் பூமிக்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்பதையே செப்.2ஆம் தேதிதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் தான், “2024 ON” என்கிற 720 அடி நீளம் கொண்ட விண்கல் ஒன்று, 40,000 கிமீ வேகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதியன்று பூமியை நெறுங்கிச் செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்பு ஏதேனு ஏற்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை.
Read More : வீட்டில் அரச மரத்தை வளர்க்கலாமா..? என்னென்ன பிரச்சனைகள் வரும்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!