fbpx

தமிழகமே…! 9-ம் தேதி வரை மழை…! மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

இன்று மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ‌

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 9-ம் தேதி வரை, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்குத் திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Vignesh

Next Post

இந்த தேதிக்குள் ராமர் கோவில் தயாராகிவிடும்..! ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த அமித்ஷா...

Fri Jan 6 , 2023
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று […]

You May Like