தொடர் விடுமுறை காரணமாக பயண நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு.
நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை, அதாவது விநாயகர் சதுர்த்தி திங்கள் கிழமை வருவதால், சனி ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் தமிழக அரசு சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நீட்டிக்கப்டுவதாக மெட்ரோ சேவை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நெரிசல்மிகு சேவை நேரம் இன்று இரவு 10 மணி வரை நீட்டிக்கப்டுகிறது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 நிமிட இடைவேளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் நீடிக்கப்ட்ட மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.