பேடிஎம் செயலி மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரு நகரங்களில் மட்டுமே இயங்கி வந்த மெட்ரோ ரயில் சேவை தற்பொழுது சென்னையிலும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை வாசிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பிடித்தமான ரயில் சேவையாக மாறியுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக மெட்ரோ பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கட் பெறுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, தற்பொழுது பேடிஎம் செயலி மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்m செயலியின் Transit பகுதிக்குள் சென்று சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற optionயை தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து டிக்கெட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், Paytm மூலம் எடுக்கும் டிக்கெட்டிற்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.