fbpx

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் அடுத்த 4 நாட்களுக்கு மழை…! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இந்த பொருளில் தான் பாலில் இருப்பதை விட அதிக கால்சியம் இருக்கிறது.. தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

Mon Sep 19 , 2022
கால்சியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எலும்புகள் முதல் தசைகள் வரை நமது உடலுக்கு கால்சியம் அவசியம். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது, அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் காணப்படுகின்றன.. ஆனால் ஒரு ஆராய்ச்சியின் படி, பாலை விட […]

You May Like