fbpx

மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 14-ம் தேதி வரை கனமழை பெய்யும்..‌.! சென்னை வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12 முதல் 14-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று முதல் 14-ம் தேதி வரை ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழ்நாடு கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

Thu Aug 11 , 2022
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கார்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என்று மருத்துவர்கள் கூறுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனாவின் 4-வது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு […]

You May Like