fbpx

அடுத்த 3 நாட்களுக்கு மழை…! சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும்… எல்லாம் எச்சரிக்கையா இருங்க

வரும் 6-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;;ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று மற்றும் நாளை ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விவசாயிகளுக்கு சூப்பரான அறிவிப்பு...! குறைந்த விலையில் இது வழங்கப்படும்...! ஆட்சியர் தகவல்..‌.

Mon Oct 3 , 2022
தருமபுரி வேளாண்மை பொறியியல் துறை மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயன்பெறலாம். தமிழ்நாடு அரசு வேளாண்‌ பெருமக்கள்‌ நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள்‌ பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை பல்வேறு புதிய, நவீன வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ […]

You May Like