fbpx

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால், 2 அணைகளில் இருந்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விநாடிக்கு 1.31 லட்சம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 16ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. குறிப்பாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த 26ஆம் தேதி 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், கடந்த 26ஆம் தேதி மூடப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் நேற்று முதல் திறக்கப்பட்டு அதன் வழியாக 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 41 ஆயிரத்து 300 கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளன. அதாவது நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 18 ஆயிரம் கன அடி, கால்வாய் வழியாக 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து எந்த நேரத்திலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வருவாய்த்துறை சார்பில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

Mon Aug 1 , 2022
தமிழக முதலமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட, மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீசாரிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை […]
’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

You May Like