fbpx

50 அடிக்கும் கீழ் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!… விவசாயிகள் கவலை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்து போனது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 549 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக குறைந்தது. 17.79 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

Kokila

Next Post

அடிதூள்...! பெண்களுக்கு இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.45,000 ஓய்வூதியம் கிடைக்கும்...! முழு விவரம்

Fri Sep 1 , 2023
பெண்கள் 60 வயதுக்குப் பிறகு NPS திட்டம் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் விவரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் இந்த NPS திட்டத்தில் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் டெபாசிட் செய்கிறது. எனவே 60 வயதிற்குள், சுமார் 1.12 கோடி ரூபாய் நிதி உருவாக்கப்படுகிறது, இதில் 10% ஆண்டு வருமானமும் அடங்கும். முதிர்ச்சி அடையும் […]

You May Like