பெங்களூருவைச் சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம், நேற்று பி.டி.எம் லே அவுட் தெருவில் நடந்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகாரை கூறியுள்ளார். நேஹா பிஸ்வால் வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு வீடியோ பதிவு செய்து கொண்டு வந்துள்ளார். அப்போது, எதிர் திசையில் இருந்து சைக்கிளில் வந்த ஒரு ஆண் பெண்ணை பிடித்துள்ளார்.
நேஹா பிஸ்வால், இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை ரீல்ஸில் விவரித்தார். “இது எனக்கு ஒருபோதும் நடக்கவில்லை, நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். நான் நடந்து செல்லும் போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன், இந்த பையன் ஆரம்பத்தில் அதே திசையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். பின்னர் அவர் என்னைப் பார்த்து யூடர்ன் செய்து என்னை நோக்கி வரத் தொடங்கினார்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அவர் முதலில் என்னை கிண்டல் செய்தார். நான் கேமராவில் எப்படி பேசுகிறேன் என்று மிமிக்ரி செய்தார். பின்னர், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்” என்று கூறினர். இதையடுத்து, காவல்துறையில் நடந்த சம்பவத்தை கூறி புகாரளித்த நிலையில், குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : Ration Card | ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க/நீக்க வேண்டுமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!