fbpx

கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்!… நெல்லூரில் நிலைகொண்டுள்ளதால் பெருமழை!

சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று(நவ.,04) சென்னை நோக்கி வந்த புயல் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது சென்னையில் இருந்து விலகி வடக்கில் 170கி.மீ தொலைவில் விலகிச்சென்று ஆந்திராவின் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே இன்று காலையில் கரையை கடக்க துவங்கி உள்ளது. முழுவதுமாக கடக்க இன்று முற்பகல் வரை ஆகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஆந்திராவின் நெல்லூர் மசூலிப்படினம் பகுதிகளில் பெரும் கனமழை பெய்து வருகிறது.

Kokila

Next Post

சென்னை மக்களை அலறவிட்ட ’மிக்ஜாம்’ புயல்..!! பொது போக்குவரத்து, தேர்வுகள் ரத்து..!!

Tue Dec 5 , 2023
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் […]

You May Like