fbpx

மிக்ஜாம் புயல்..!! ’கைவிட்ட சென்னை.. காப்பாற்றிய தெலங்கானா’..!! சர்ச்சையில் சிக்கிய விஜே ரம்யா..!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், தன்னை சென்னை கைவிட்டதாக நடிகை ரம்யா தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரக் கூடியவர் விஜே ரம்யா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்பொழுது பிட்னஸ் ட்ரெயினராக பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை தன்னைக் கைவிட்டதாகவும் தெலங்கானா தன்னைக் காப்பாற்றி விட்டதாகவும் விஜே ரம்யா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விமானத்தில் செல்லும் புகைப்படம் ஒன்றை ரம்யா பகிர்ந்துள்ளார். அதில், தன் தாய் வீடான சென்னை தன்னைக் கைவிட்டதாகவும், இரண்டாம் தாய் வீடான தெலங்கானா காப்பாற்றியதாகவும், சென்னையிலிருந்து தெலங்கானாவுக்கு பயணிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இத்தனை ஆண்டுகள் இங்கே வசித்து புகழ் பெற்றதை மறந்து விட்டாரா? இல்லை அரசை குறை கூறுகிறாரா? என ரசிகர்கள் அவருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

மத்திய அரசிடம் 5000 கோடி நிதி உதவி.! மிக் ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் தீவிரம்.!

Tue Dec 5 , 2023
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. நேற்று இந்த புயல் கரையை கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற […]

You May Like