fbpx

வேகம் எடுத்த மிக்ஜாம் புயல்!… நள்ளிரவிலேயே சூறைக்காற்றுடன் கனமழை!… 5 இடங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. தொடர்ந்து வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் உள்ள ஒரு நதியின் பெயர் இதுவாகும். வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.

இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையேயும் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மிக்ஜாம் புயல் மணிக்கு 7 கி.மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் எடுத்துள்ளது.

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை இரவு முழுவதும் பெய்து வருகிறது. காற்றின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக அரும்பாக்கம் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் 5 இடங்களில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூரி, எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரியில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை,காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நள்ளிரவிலேயே சூறைக்காற்றுடன் கடலோரப்பகுதிகளில் மழை பெய்தது.

Kokila

Next Post

#சற்று முன்...! 14 கி.மீ வேகத்தில் கரையை நெருங்கி வரும் மிக்ஜாம் புயல்..!

Mon Dec 4 , 2023
14 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 130 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 160 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து இன்று முற்பகல் […]

You May Like